'மீடூ' புகார்

'மீடூ' புகார்

1 mins read
00a92ba8-32fb-46bc-a8a7-a6a353a6e29a
-

ஹாங்காங்: விமானப் பணிப் பெண் ஒருவர், பயணிகள் மட்டுமல்லாமல் விமான ஊழியர்களிடமிருந்தும் பல்வேறு பாலியல் தொல்லை களுக்கு ஆளானதாக 'மீடூ' பாணியில் புகார் தெரிவித் துள்ளார். ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தமக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் காரணமாக வெளியே சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக 29 வயது வீனஸ் ஃபங் சொன்னார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்த புதிதில் தன்னுடைய மார்பு, இடுப்பு, கீழ்ப்பகுதி அனைத்தையும் தொட்டுப் பார்த்த விமானி ஒருவர், நல்ல உடல் என்று வருணித்ததாகவும் ஹாங்காங் கில் பணியாற்றும் வீனஸ் ஃபங் கூறினார். அண்மைக் காலமாக உலக முழுவதும் பாலியல் தொல்லை பற்றி புகார் தெரிவிக்கும் விமானப் பணிப்பெண்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது.