பிரதமர் மே எச்சரிக்கை: எதிர்காலம் நிச்சயமில்லை

பிரதமர் மே எச்சரிக்கை: எதிர்காலம் நிச்சயமில்லை

1 mins read
a409044d-18cb-4916-8b88-1edc44f71cc4
-

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து பிரிட்டன் வெளியேறு வதற்காக பிரிட்டிஷ் பிரதமர் மே தயாரித்துள்ள 'பிரக்சிட்' திட்டத் திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் வாக்களிக்கவிருக் கின்றனர். இந்த நிலையில் பேசியுள்ள பிரதமர் மே, பிரக்சிட் திட்டம் நிராகரிக்கப்பட்டால் பிரிட்டனின் எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிடும் என்று எச்சரித்தார். மெயிலுக்கு பேட்டியளித்த அவர் தமது உத்தேச திட்டம் புறக் கணிக்கப்பட்டால் எதிர்காலம் எந்த திசையில் செல்லும் என்பது நிச்சயமில்லை என்று குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலுக்கு வழி வகுத்துவிடும் என்றும் நாடாளு மன்ற உறுப்பினர்களை எச்சரித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து வெளியேற முடியாமல் போய்விடும் என்றும் சொன்னார். இதற்கிடையே நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்படலாம் என்று சில தகவல்கள் தெரி வித்தன. ஆனால் இதனை பிரதமரின் டவ்னிங் ஸ்திரீட் அலுவலகம் மறுத்துள்ளது. கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்பாட்டுக்கு பிரிட்டன் சம் மதித்தது. ஆனால் இதற்கு பிரிட் டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதால் பிரிட்டனுக்கு நன்மையா? என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். பிரதமர் மேயின் திட்டம் நிராக ரிக்கப்பட்டால் அவரது அரசாங்கம் கவிழும் ஆபத்து உள்ளது.