புத்ராஜெயா: மலேசியாவின் மின்சார ரயில்கள் சீனப் புத்தாண்டை முன்னிட்டு 24 மணி நேரமும் சேவை வழங்கும் என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறியுள்ளார்.
பண்டிகைக் காலங்களின்போது கேடிஎம்பி நிறுவனம் முன்னெச்சரிக்கையாக சில ரயில்களைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் என்றார் அவர்.
“சேவையில் உள்ள ரயிலில் கோளாறு ஏற்படும்போது முன்னெச்சரிக்கையாகத் தயார்நிலையில் வைக்கப்பட்ட ரயில்கள் பயன்படுத்தப்படும்,” என்றார் திரு லோக்.
ஆனால், ரயில்கள் அனைத்தையும் சேவையில் பயன்படுத்தும்படி கேடிஎம் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் கேடிஎம் நிறுவனம் முக்கிய ரயில் கட்டமைப்பை நிர்வகிக்கிறது.
தேவை ஏற்பட்டால் கூடுதலான ரயில்களைச் சேவையில் இணைக்கவும் திட்டமிடுவதாகத் திரு லோக் சொன்னார்.
“தேவைக்கு ஏற்ப அல்லது நள்ளிரவு நேரங்களில் கூடுதல் விமானங்களைச் சேவையில் ஈடுபடுத்துவது போல ரயில்களையும் ஈடுபடுத்துவோம்,” என்று அவர் சுட்டினார்.
பண்டிகைக் காலங்களின்போதும் பொது விடுமுறைகளிலும் தேவை அதிகரித்தால் சேவைகளும் அதிகரிக்கும் என்று திரு லோக் வாக்குறுதி அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவிலிருந்து சாபா, சரவாக், லபுவான் ஆகியவற்றுக்கான ஒரு வழி உள்நாட்டு விமானச் சேவைகளுக்கு மலேசிய அரசாங்கம் மானியமும் வழங்குகிறது.

