முன்னாள் தென்கொரிய அமைச்சருக்கு 25 ஆண்டுகள் சிறை

முன்னாள் தென்கொரிய அமைச்சருக்கு 25 ஆண்டுகள் சிறை

1 mins read
தென்கொரியாவில் ராணுவ சட்டம் கொண்டுவரப்பட்டது தொடர்பில் தீர்ப்பு
28a3b0c3-4f6c-4e75-ab94-b9722aa869b3
தென்கொரியாவில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சருக்கு திங்கட்கிழமை (ஜூன் 22) 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் 2024ஆம் ஆண்டில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். அதில் பங்கு வகித்ததன் காரணத்துக்காக அந்நாட்டின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் பார்க் சுங் ஜேக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யூன் அமல்படுத்திய ராணுவ சட்டம் சுமார் ஆறு மணிநேரத்துக்குத்தான் நடப்பில் இருந்தது. அரசியல் தலைவர்கள் அவசரமாக நாடாளுமன்றத்துக்குச் சென்று அந்நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்தது அதற்குக் காரணம்.

அதனைத் தொடர்ந்து எதிர்ப்பைத் தூண்டியதாக யூன்மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து அவர் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், யூன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுளளார்.

தேசிய அளவில் நெருக்கடியை ஏற்படுத்தி தான் விதித்த ராணுவ சட்டத்தை நியாயப்படுத்த யூன், வடகொரியாவுக்கு வானூர்திகளை அனுப்பியதற்காக முன்னதாக யூனுக்கு 30 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ராணுவச் சட்டம் விதிக்கப்பட்ட பிறகு அதன் தொடக்கத்தில் பார்க், ஒருவேளை அரசாங்கத்துக்கு எதிரானவர்களை அதிகாரிகள் கைது செய்தால் அவர்களை வைக்க சிறைகளில் போதுமான இடம் இருப்பதைத் தெரிந்துகொள்ள நீதித்துறை அமைச்சு அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்