பிள்ளையைப் பட்டினிப்போட்டுக் கொன்ற தம்பதிக்கு 30 ஆண்டு சிறை

1 mins read
368d6676-dd2d-4bbb-b616-d02ec30191d2
படம்: பெக்சல்ஸ் -

தென்கொரியாவில் 2 வயது சிறுமியை பட்டினிப்போட்டுக் கொன்ற தம்பதிக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட 22 வயது பெண்ணும் 29 வயது ஆடவரும் 2021 ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரை 2 வயது சிறுமியையும் அவளது 17 மாத தம்பியையும் துன்புறுத்தியுள்ளனர்.

சிறுமி 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாண்டார். ஊட்டச்சத்து குறைபாடு, மூளை பாதிப்பு ஆகியவற்றால் அவர் மாண்டார்.

பிள்ளைகள் இருவரும் 22 வயது பெண்ணுக்கு பிறந்தவர்கள். 29 வயது ஆடவர் வளர்ப்பு தந்தை என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

சிறுமி நாய்க்கு வைத்த உணவையும் அதன் கழிவுகளையும் உண்ட போது மயங்கியுள்ளார். சிறுமி பசிக்காக குப்பைத் தொட்டிகளில் உணவைத் தேடியும் உள்ளார்.

சிறுமி இறப்பதற்கு முன்னர் இரண்டு வாரங்களுக்கு அந்த தம்பதி எந்த உணவையும் அவளுக்கு வழங்கவில்லை.

உயிருடன் உள்ள சிறுமியின் தம்பியும் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளான்.

சிறுமி பசியால் இறக்கவில்லை, தமது இரண்டாவது கணவர் அடித்ததால் தான் மாண்டதாக அந்தப் பெண் கூறுகிறார். ஆனால் அதை அந்த ஆடவர் மறுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்