தட்டம்மை: பங்ளாதே‌ஷில் 300 பிள்ளைகள் மரணம்

தட்டம்மை: பங்ளாதே‌ஷில் 300 பிள்ளைகள் மரணம்

2 mins read
ded39320-d210-47a3-9603-001c26cf40a2
பங்ளாதே‌ஷில் தட்டம்மையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிள்ளைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா: பங்ளாதே‌ஷில் தலைத்தூக்கியுள்ள தட்டம்மையால் 300க்கும் அதிகமான பிள்ளைகள் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தட்டம்மை நிலவரம் அங்கு மோசமடைந்துள்ளதை அடுத்து மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பிள்ளைகளால் நிரம்பியுள்ளன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மருத்துவர்களும் திணறிவருகின்றனர்.

பங்ளாதே‌ஷில் பல்லாயிரக்கணக்கான இளம் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் போராடி வருகின்றன.

கடந்த மாதம் 15ஆம் தேதி நிலவரப்படி பங்ளாதே‌ஷில் தட்டம்மையால் 336 பிள்ளைகள் மாண்டனர். 50,000க்கும் அதிகமான பிள்ளைகளிடம் தட்டம்மை உறுதிப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் பெரும்பாலோர் ஆறு மாதங்களிலிருந்து ஐந்து வயதுக்கு உட்பட்டோர்.

இம்மாதம் 4ஆம் தேதி, இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் ஆக அதிக எண்ணிக்கையாக 17 பிள்ளைகள் தட்டம்மையால் பலியாயினர்.

இம்மாதம் 4ஆம் தேதி 17 பிள்ளைகள் தட்டம்மையால் மாண்டனர். 
இம்மாதம் 4ஆம் தேதி 17 பிள்ளைகள் தட்டம்மையால் மாண்டனர்.  - படம்: ராய்ட்டர்ஸ்

தட்டம்மை நோய்க்கான தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதில் பங்ளாதே‌ஷ் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தது. ஆனால், 2024ஆம் ஆண்டு பங்ளாதே‌ஷின் முன்னாள் பிரதமர் ‌ஷேக் ஹசினாவின் ஆட்சியைக் கவிழ்க்க மூண்ட புரட்சியால் நாட்டில் தட்டம்மைக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தாமதமடைந்தன.

பங்ளாதே‌ஷில் தட்டம்மை இயக்கம் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 17 மில்லியன் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

கடந்த ஆண்டு ஏறக்குறைய 59 விழுக்காட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. தட்டம்மைப் பரவலைத் தடுக்க கிட்டத்தட்ட 95 விழுக்காட்டுப் பிள்ளைகளுக்குத் தடுப்பூசிப் போடுவது அவசியம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பங்ளாதே‌ஷில் 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பால் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான பிள்ளைகளுக்கு மட்டும் தட்டம்மைத் தடுப்பூசிப் போடப்பட்டது.
பங்ளாதே‌ஷில் 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பால் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான பிள்ளைகளுக்கு மட்டும் தட்டம்மைத் தடுப்பூசிப் போடப்பட்டது. - படம்: ஏஃப்பி

எளிதில் தொற்றக்கூடிய தட்டம்மை பெரும்பாலும் இருமல், தும்மல் ஆகியவை மூலம் பரவுகிறது. சிறு பிள்ளைகளிடையே விரைவாகத் தொற்றக்கூடிய தட்டம்மைக்குத் தனிப்பட்ட சிகிச்சை கிடையாது.

தட்டம்மைக்கு ஆளாகும் பிள்ளைகள் மூச்சுவிட சிரமப்படுவதுடன் அவர்களின் உடல் வலிமையும் குறைகிறது. மோசமான சூழல்களில் தட்டம்மைத் தொற்று பிள்ளைகளின் மூளையை எட்டி அதை வீங்கச் செய்து இறுதியில் மரணத்தை விளைவிக்கிறது.

தட்டம்மை இருமல், தும்மல் ஆகியவை மூலம் பிள்ளைகளிடம் எளிமையாகப் பரவுகிறது.
தட்டம்மை இருமல், தும்மல் ஆகியவை மூலம் பிள்ளைகளிடம் எளிமையாகப் பரவுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
குறிப்புச் சொற்கள்