காத்மாண்டு: உலகின் ஆக உயரமான மலையான எவரெஸ்ட் மலையின் உச்சியை நேப்பாளத்தைச் சேர்ந்த 55 வயது மலையேறி 31வது முறையாக அடைந்துள்ளார்.
எவரெஸ்ட் மலை உச்சியை அவர் முதல்முறையாகத் தொட்டு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 27) பிரபல மலையேறியான கமி ரிட்டா ஷேர்ப்பா புதிய சாதனை படைத்தார்.
சாதனை வீரர் கமி ரிட்டா ஷேர்ப்பாவுக்கு மலையேறும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்த செவன் சமிட் டிரேக்ஸ் நிறுவனம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது.
மற்ற மலையேறிகளைவிட எவரெஸ்ட் மலை உச்சியை கமி ரிட்டா ஷேர்ப்பா ஆக அதிக முறை அடைந்துள்ளதாக அது புகழாரம் சூட்டியது.
தமது சாதனை உலகளவில் நேப்பாளத்தைப் பிரபலமாக்க உதவும் என்று பெருமிதத்துடன் கூறினார் கமி ரிட்டா ஷேர்ப்பா.
எவரெஸ்ட் மலை உச்சியை இதுவரை 500க்கும் மேற்பட்டோர் அடைந்துள்ளனர்.