கோலாலம்பூரில் ஆயுதமேந்தி தாக்குதல் நடத்திய 34 பேருக்கு $970 வரை அபராதம்

கோலாலம்பூரில் ஆயுதமேந்தி தாக்குதல் நடத்திய 34 பேருக்கு $970 வரை அபராதம்

2 mins read
27f47ef0-b553-4c7c-adbf-c76d7f636db8
தாக்குதலில் ஈடுபட்ட சிலரை மலேசியக் காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். - படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: ஏப்ரல் 5ஆம் தேதி அன்று தாமன் ஷாமெலினில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்திற்குள் புகுந்து அட்டூழியம் புரிந்த 34 பேர் கொண்ட குழுவிற்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் RM2,000 முதல் RM3,000 (S$970) வரை அபராதம் விதித்துள்ளது.

ஏப்ரல் 10ஆம் தேதி அன்று மாஜிஸ்திரேட் ஃபாயெஸஹ்னூர் ஹசான் முன்னிலையில் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர்களில் முப்பத்திரண்டு பேருக்கு தலா RM3,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 21 வயதுக்கும் 57 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். டான் சீ சின், ஜி. பத்மநாதன், எம். கோகிலன், லிம் புவே ஃபீ, கெவின் யோங் கை வென், ஓங் ஜி ஜியான், லூயி காய் சுவான், வோய்சன் சோர், டான் ஜுன் நிங், ஹீ டக் சோய், சிங் தாங் ஹாய், கீ ஜின் சுவான், லிம் தியோங் யாவ், சான் குவாங் மான், ஹோ சீ சியோங் ஆகியோர் அக்கும்பலில் இருந்தவர்கள்.

மேலும் அக்கும்பலில், வோங் சீ சியோங், லியாங் சுங் வெங், ஜி.ஸ்ரீகாந்த், ஏ.கணேசன், லீ மிங் சூங், வோங் வை குயென், கோர் கா லோக், ஓங் ஜெங் யுவான், யாம் ஹாவ் ஜீ, லிம் ஜியா செங், சாய் சுன் யூ, கெர் குவான் ஹெங், ஓங் ஐக் சிம், சோங் காய் ஜுன், ஹட்ரின் ஜுலாஸ்ரின், லீ டக் வா, சின் சின் சுங் ஆகியோரும் இருந்தனர்.

19 வயதான ஆல்வின் யோங் கை ஷே, சோங் யூ ஹெங் ஆகிய மற்ற இருவருக்கும் தலா RM2,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருள்களுடன் தடிகளையும் கற்களையும் ஆயுதமாகக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது என்று தி ஸ்டார் செய்தி கூறியது.

இச்சம்பவம் ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் செராசில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நிகழ்ந்தது.

குறிப்புச் சொற்கள்