லண்டன்: ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தரவுகள்படி 2024ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 4.9 மில்லியன் இளம் குழந்தைகள் உயிரிழந்தன.
மாண்ட குழந்தைகளின் வயது ஐந்துக்கும் குறைவானது என்று தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகள் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த ஐக்கிய நாட்டு நிறுவனம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதிலும் இறப்புகளை எதிர்பார்த்த அளவுக்குக் குறைக்க முடியவில்லை.
2025ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் நன்கொடைகள் குறைந்துள்ளதால் பாதிப்பு இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சரியான சுகாதாரக் கட்டமைப்பு இருந்திருந்தால் பெரும்பாலான குழந்தை இறப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
குறை மாதத்தில் பிறப்பது, மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்படுவது உள்ளிட்டவை பிள்ளைகள் இறப்புக்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக யுனிசெஃப், உலக வங்கி, உலகச் சுகாதார நிறுவனம், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மக்கள் தொகைப் பிரிவு ஆகியவை தெரிவித்தன.
மேலுள்ள அமைப்புகள் ஒன்றாக இணைந்து தரவுகளைச் சேகரித்தன.
2,000ஆம் ஆண்டு முதல் குழந்தை இறப்புச் சம்பவங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டது, இருப்பினும் 2015ஆம் ஆண்டு முதல் அது மெதுவானது.
தொடர்புடைய செய்திகள்
2022ஆம் ஆண்டு 4.9 மில்லியன் பிள்ளைகள் இறந்தன. 2023ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 4.8 மில்லியனாகப் பதிவானது. 2024ஆம் ஆண்டு இறப்புகள் எண்ணிக்கை சற்று கூடியுள்ளது.

