விமான விபத்தில் சிக்கிய 4 சிறுவர்கள் 16 நாள்கள் காட்டில் தவிப்பு

1 mins read
783b06c2-ba18-4594-a748-dbb2a53f5794
படம்: ராய்ட்டர்ஸ் -

கொலம்பியாவில் விமான விபத்தில் சிக்கிய நான்கு குழந்தைகள் காட்டிற்குள் 16 நாள்கள் தனியாகத் தவித்துள்ளனர்.

அவர்கள் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை நன்றாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தைகளின் தாய் விபத்தில் மாண்டார்.

காட்டில் வாழும் பழங்குடி மக்களால் அந்தக் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக விமானி ஒருவர் கூறினார்.

மே 1ஆம் தேதி அரராகுராவில் இருந்து சான் ஒசே டெல் குவியருக்குச் சென்றுகொண்டிருந்த தனியார் விமானம் காணாமல் போனது.

அமசான் காட்டிற்கு மேல் பறந்து கொண்டிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக விமானி தகவல் அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் அந்தக் காட்டில் 100க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

மீட்கப்பட்ட குழந்தைகளின் வயது 13, 9, 4 ஆண்டுகள்; இன்னொன்று 11 மாதக் குழந்தை.

விமானத்தின் இரு விமானிகளும் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்