நச்சுணவுக்கு 40 நாய்கள் பலி; செல்லப்பிராணிகளுக்கு முகக்கவசம்

1 mins read
7625a0c2-836f-4848-b518-2103955eeb62
நச்சுணவு சாப்பிடாமல் இருப்பதற்காக உரிமையாளர்கள் தங்களுடைய செல்லப் பிராணிகளுக்கு முகக்கவசம் போட்டுள்ளனர். - படம்: ஸியாஹோங்ஷு

பெய்ஜிங்: நச்சுணவுக்கு 40 நாய்கள் பலியானதைத் தொடர்ந்து உரிமையாளர்கள் தங்களுடைய செல்லப்பிராணிகளுக்கு முகக்கவசங்களைப் போட்டு பாதுகாத்து வருகின்றனர்.

நவம்பர் 16ஆம் தேதி குவாங்டோங் செல்லப் பிராணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நச்சுணவுக்கு செல்லப் பிராணிகள் பலியானதாக பல புகார்கள் வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குவாங்ஷோவில் பாயுன், ஹாய்ஷு, பான்யு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் புகார்கள் வந்துள்ளன.

இதன் காரணமாக அவசரகால நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை தொடங்கியிருக்கிறது என்று சங்கம் தெரிவித்தது.

நச்சுணவு சம்பவங்களில் உண்மையைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் சங்கம் கூறியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்