தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவில் இறகுப்பந்துகளுக்கு 40% விலையேற்றம்

1 mins read
aa4f2100-a8cd-402e-93fd-a0b06b46b5c5
சீனாவில் இறகுப்பந்துகளின் விலை கடந்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு கூடியுள்ளது.  - படம்: பிக்சாபே

சிங்கப்பூர்: சீனாவில் இறகுப்பந்துகளின் விலை கடந்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு கூடியுள்ளது.

பேட்மிண்டனை தேசிய விளையாட்டாகக் கருதும் 1.4 பில்லியன் பேர் கொண்ட நாட்டில் அதன் தொடர்பில் இணையத்தில் பல கருத்துகளும் புகார்களும் எழுந்துள்ளன.

வாத்து இறகுகளின் விலை உயர்வே அதற்கு முக்கியக் காரணம் என்று அத்துறையினர் ‘சிஎன்ஏ’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். அவை இறகுப்பந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.

குறைந்துவரும் பன்றி இறைச்சி விலை பயனீட்டாளர் தேவையை அதிகரிக்கிறது. அதன் காரணமாக குறைவான விவசாயிகளே வாத்துகளை வளர்ப்பதால், இறகுப்பந்துகளில் பயன்படுத்தப்படும் அவற்றின் இறகுகளின் விலை மேலும் கூடுதலாக உள்ளது.

பன்றி இறைச்சிக்கு சீனா உலகின் ஆகப் பெரிய உற்பத்தியாளர், பயனீட்டாளர், இறக்குமதியாளர். ஒவ்வோர் ஆண்டும், அந்நாட்டில் ஏறக்குறைய 700 மில்லியன் பன்றிகள் உட்கொள்ளப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்