பறவைக் காய்ச்சல்: வியட்னாமில் 47 புலிகள் பலி

1 mins read
357cb019-066a-4235-847b-a1312f0c004a
அந்த விலங்குகள் ‘எச்5என்1’ ‘ஏ’ வகை கிருமி காரணமாக மாண்டதாக விலங்கு சுகாதார நோயறிதலுக்கான வியட்னாமின் தேசிய நிலையத்திலிருந்து வந்த சோதனை முடிவுகள் காட்டின. - படம்: நியூயார்க் டைம்ஸ்

ஹனோய்: தென் வியட்னாமில் உள்ள விலங்கியல் தோட்டங்களில், ‘எச்5என்1’ பறவைக் காய்ச்சல் கிருமியால் 47 புலிகள், மூன்று சிங்கங்கள், ஒரு சிறுத்தை ஆகியவை மாண்டதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

‘லொங் அன்’ மாநிலத்தில் உள்ள ‘மை குயின் சஃபாரி’ பூங்கா, ஹோ சி மின் சிட்டிக்கு அருகே, ‘டொங் நாயில்’ உள்ள ‘வுன் ஸொஐ’ விலங்கியல் தோட்டம் ஆகியவற்றில் அம்மரணங்கள் நேர்ந்ததாக அதிகாரபூர்வ ‘வியட்னாம் நியூஸ் ஏஜன்சி’ தெரிவித்தது.

அந்த விலங்குகள் ‘எச்5என்1’ ‘ஏ’ வகை கிருமி காரணமாக மாண்டதாக விலங்கு சுகாதார நோயறிதலுக்கான வியட்னாமின் தேசிய நிலையத்திலிருந்து வந்த சோதனை முடிவுகள் காட்டியதாக அது கூறியது.

‘ஏஎஃப்பி’ செய்தி நிறுவனம் தொடர்புகொண்டபோது, அந்த விலங்கியல் தோட்டங்கள் அதன் தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

விலங்குகளுடன் நெருக்கமாகப் பழகிய எந்தவொரு விலங்கியல் தோட்ட ஊழியருக்கும் சுவாசப் பிரச்சினைக்கான அறிகுறிகள் இல்லை என்று செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

சென்ற ஆண்டிறுதி நிலவரப்படி, வியட்னாமில் வளர்க்கப்படும் புலிகளின் எண்ணிக்கை 385ஆக இருந்ததாக அரசாங்க சார்பற்ற அமைப்பு ஒன்று தெரிவித்தது.

அவற்றில் 310, 16 தனியார் பண்ணைகளிலும் விலங்கியல் தோட்டங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை, அரசாங்கத்துக்குச் சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்