புதிதாக 4,718 பேருக்கு கொவிட்-19 தொற்று; ஒருவர் மரணம்

புதிதாக 4,718 பேருக்கு கொவிட்-19 தொற்று; ஒருவர் மரணம்

1 mins read
b25f199c-5335-4ace-8418-f83648b2dbdb
-

சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) புதிதாக 4,718 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று திங்கட்கிழமை பதிவான எண்ணிக்கையைவிட இது கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.

பொதுவாக, வாரத்தில் மற்ற நாள்களைவிட செவ்வாய்க்கிழமைகளில் தொற்று எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சில மருந்தகங்கள் மூடப்பட்டிருப்பதால், தொற்று அறிகுறி உடையோர் அடுத்த நாள் திங்கட்கிழமை மருத்துவரிடம் சென்று பார்ப்பதால், அன்றைய தினத்துக்கான தொற்று எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை கணக்கில் சேர்க்கப்படுகிறது.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்ரல் 12) ஒப்புநோக்க, இன்றைய தினம் பதிவான தொற்று எண்ணிக்கை சற்று அதிகம். கடந்த செவ்வாய்க்கிழமை 4,552 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.

கொவிட்-19க்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 278ஆக உள்ளது. நேற்று திங்கட்கிழமை இது 261ஆக இருந்தது.

கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்தார்.