ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சும்பாவா வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனியின் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவு இருந்ததாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுவரையில் சம்பவம் நடந்த நேரம், பாதிப்படைந்தோரின் விவரங்கள், ஏற்பட்ட சேதத்தின் தீவிரம் போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
அந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான தீவுகளுடன் பல எரிமலைகளும் சூழ்ந்துள்ள இந்தோனீசியாவில் அண்மைக் காலமாகப் பல இயற்கைப் பேரிடர்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.
