வெளிநாட்டு ஊழியர்களைக் கடத்தி வந்ததாக குடிநுழைவு அதிகாரிகள் ஐவர் கைது

1 mins read
5968057e-75a8-4504-856c-a6b18da498d6
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நாட்டிற்குள் வெளிநாட்டு ஊழியர்களைக் கடத்தி வந்த சந்தேகத்தின்பேரில் ஒன்பது பேரைக் கைதுசெய்துள்ளது மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம்.

கைதானோரில் ஐவர் மலேசியக் குடிநுழைவு அதிகாரிகள். அவர்கள் சாபா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

சாபா மாநிலத்தில் இருந்து கோலாலம்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்களைக் கடத்தி வர சந்தேக நபர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்கள் 755 வெள்ளி கேட்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மற்றவர்களின் அடையாளங்களைக் கொண்டு மோசடி நடவடிக்கையில் சந்தேகப் பேர்வழிகள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மோசடிக் கும்பல் 2018ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகவும் அது கோலாலம்பூர் விமான நிலையம்வழி ஒவ்வொரு விமானம் மூலம் ஐந்து முதல் இருபது வெளிநாட்டு ஊழியர்களைக் கடத்தி வருவதாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.