மலேசியாவில் 5 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள்கள் சிக்கின

மலேசியாவில் 5 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள்கள் சிக்கின

1 mins read
0a2a9434-cb51-40d0-a97e-6a0f8ed8968f
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் குறித்து சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஷஸெலி கஹார் செய்தியாளர்களிடம் விளக்கினார். - படம்: த ஸ்டார்

ஷா ஆலம்: பல்வேறு அனைத்துலகக் குற்றக்கும்பல்களிடம் இருந்து 5.45 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 82 கிலோ போதைப்பொருள்களை மலேசிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் சிப்பாங் அருகில் உள்ள பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் நடத்திய சோதனையில் கும்பல்களைச் சேர்ந்தோர் பிடிபட்டனர்.

முதலாவது கைது நடவடிக்கை ஏப்ரல் 5ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையம் அருகே உள்ள கடைத்தொகுதியின் கார்நிறுத்துமிடத்தில் நடைபெற்றதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஷஸெலி கஹார் கூறினார். 19 வயதுப் பெண் ஒருவரை அங்கு அதிகாரிகள் கைது செய்தனர்.

அந்த மலேசியப் பெண் வைத்திருந்த கைப்பெட்டியில் 12 பிளாஸ்டிக் பொட்டலங்கள் இருந்தன. அந்தப் பொட்டலங்களில் ‘ஷாபு’ (syabu) போதைப்பொருள் இருந்ததாக நம்பப்படுகிறது. அவற்றின் மதிப்பு 625,000 ரிங்கிட் என்றார் அவர்.

இரண்டாவது சம்பவம் விமான நிலையத்தின் முனையம் 1ல் நடைபெற்றது. அங்கு கிடந்த மூன்று பயணப் பைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றுள் 90 பிளாஸ்டிக் பொட்டலங்களில் கஞ்சா இலைகள் இருந்தன. 45 கிலோ எடையுள்ள அந்தப் போதைப்பொருளின் மதிப்பு 3.6 மில்லியன் ரிங்கிட் எனவும் திரு ஷஸெலி கூறினார்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 26க்கும் 37க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்