நோன்புப் பெருநாளை முன்னிட்டு மலேசியச் சுங்கச்சாவடிகளில் 50% கழிவு

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மலேசியச் சுங்கச்சாவடிகளில் 50% கழிவு

1 mins read
cb18f8ce-6032-45c4-b94e-b3cfbecdd5fa
மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்காகும் செலவைக் குறைப்பதே நோக்கம்.  - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மதானி அரசாங்கம் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சுங்கச்சாவடிக் கட்டணங்களில் 50 விழுக்காட்டுக் கழிவை அறிவித்துள்ளது.

மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்காகும் செலவைக் குறைப்பதே முக்கிய நோக்கம்.

அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க, குறிப்பாக விழாக்காலங்களில் மக்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள விரிவான நடவடிக்கையின் ஒரு பகுதி அது.

“சுங்கச்சாவடிக் கட்டணங்களில் 50 விழுக்காட்டுக் கழிவைக் கொடுக்கும் திட்டத்திற்கு 21.03 மில்லியன் ரிங்கிட் செலவாகும்,” என்று திரு அன்வார் கூறினார்.

அந்தக் கழிவு புதன்கிழமை (மார்ச் 18) நள்ளிரவு 12.01 மணிக்கு நடப்புக்கு வரும். வியாழக்கிழமை (மார்ச் 19) இரவு 11.59 மணிக்கு அது நிறைவுபெறும்.

சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தில் உள்ள சுங்கச்சாவடி, மலேசியா - சிங்கப்பூர் இரண்டாம் இணைப்பில் உள்ள தஞ்சுங் குப்பாங் சுங்கச்சாவடி ஆகியவற்றைத் தவிர, அனைத்து நெடுஞ்சாலைகளிலும் முதல் பிரிவு தனியார் வாகனங்களுக்கு அந்தக் கழிவு பொருந்தும் என்று நிதி அமைச்சருமான திரு அன்வார் கூறினார்.

இந்நிலையில், ஒட்டுமொத்த மதானி அரசாங்கத்தின் சார்பில், பிரதமர் அன்வார் அனைத்து மலேசியர்களுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்