500,000 விமானப் பயணச்சீட்டுகளை இலவசமாக வழங்கும் நகரம்

1 mins read
b278c609-f337-4276-86d8-df3c18879dab
இலவச பயணச்சீட்டு வேண்டுவோர் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் ஹாங்காங் விமான நிலைய இணையத்தளம் வழியாகத் தங்களது பெயரைப் பதிவுசெய்யலாம். படம்: ஏஎஃப்பி -

ஹாங்காங்: சுற்றுலாத்துறைக்குப் புத்துயிரூட்டவும் அதிக அளவில் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் நோக்கிலும் ஹாங்காங் அரசாங்கம் 500,000 விமானப் பயணச்சீட்டுகளை இலவசமாக வழங்கவிருக்கிறது.

பிப்ரவரி 2ஆம் தேதி இத்திட்டத்தை ஹாங்காங் அறிவித்தது. 'ஹலோ ஹாங்காங்' என்ற திட்டத்தின்கீழ் அது செயல்படுத்தப்படும்.

கேத்தே பசிபிக், ஹாங்காங் ஏர்லைன்ஸ், HK எக்ஸ்பிரஸ் ஆகிய விமானங்கள் இலவச விமானப் பயணச்சீட்டுகளை வழங்கும்.

இந்த 500,000 விமானப் பயணச்சீட்டுகளின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 255 மில்லியன் அமெரிக்க டாலர் (S$343 மில்லியன்).

இலவச பயணச்சீட்டுகளைப் பெற விரும்புபவர்கள் மார்ச் 1ஆம் தேதி முதல் தங்களது பெயரை ஹாங்காங் விமான நிலையத்தின் இணையத்தளம் வழியாகப் பதிவுசெய்துகொள்ளலாம். குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இலவசப் பயணச்சீட்டு ஒதுக்கீடு மூன்று கட்டங்களாக இடம்பெறும். மார்ச் 1 முதல் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ளவர்களும் ஏப்ரல் 1 முதல் சீனாவில் வசிப்பவர்களும் மே 1 முதல் உலகின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பதிவு செய்யலாம்.