கோலாலம்பூர்: மலேசியாவில் காசநோய் பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது அந்த நாட்டில் புதிதாக 503 பேருக்குக் காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வாரங்களாகவே மலேசியாவில் காசநோய் பரவல் தீவிரமாக உள்ளது.
நோய்ப்பரவல் குறித்து மலேசியச் சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) அறிக்கை வெளியிட்டது. இதுவரை 2,571 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாபா மாநிலத்தில் 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அது 23.88 விழுக்காடாகும்.
சிலாங்கூரில் (Selangor): 476 பேரும், சரவாக்கில் (Sarawak): 257 பேரும், ஜோகூரில் (Johor): 233 பேரும், கோலாலம்பூர் & புத்ராஜெயா ஆகிய கூட்டாட்சி பிரதேசங்களில் : 202 பெரும் பாதிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் 476 பேர், சரவாக்கில் 257 பேர், ஜோகூரில் 233 பேர் கோலாலம்பூர், புத்ரஜெயாவில் 202 பேர், பினாங்கு மாநிலத்தில் 148 பேர், கெடா மாநிலத்தில் 144 பேர், பேராக்கில் 127 பேருக்கும் காசநோய் பாதிப்பு உள்ளது.
மற்ற மாநிலங்களில் பாதிப்பு 100-கும் குறைவாகவே உள்ளது.
சீனப் புத்தாண்டு விடுமுறையும் ரமலான் நோன்பு காலமும் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் கவனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காசநோயைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் முகக்கவசம் அணியுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
தொடர் இருமல், காய்ச்சல், திடீரென் உடல் எடைக் குறைவு, பசியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
காசநோய் வேகமாகப் பரவும் நோய் என்பதால் மக்கள் கவனமாக இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

