லிமா: லத்தீன் அமெரிக்க நாடான பெருவை வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதாக ஜெர்மானிய நில அறிவியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.
ஜுனின் நகரை நிலநடுக்கம் உலுக்கியதையடுத்து தலைநகர் லிமாவில் சிலர் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் திரண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக அண்மைய நிலவரப்படி யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை. குறிப்பிடத்தக்க சேதம் ஏதும் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் ஏதும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை முறை தெரிவித்தது.
