எல்லைத் தாக்குதலில் 6 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி

1 mins read
fdba01b9-a64c-4997-b803-73b4804cb365
பெஷாவர் மாநிலத்தில் பாகிஸ்தானிய காவல்துறை அதிகாரிகள் பணியில் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி எடுக்கப்பட்ட படம். - படம்: இபிஏ

பெஷாவர்: ஆயுதம் ஏந்திய போராளிகள், பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள எல்லைக் காவல் நிலையத்தை தாக்கியதில் ஆறு ராணுவத்தினர் மாண்டனர்.

அதனை மூன்று பாகிஸ்தான் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) உறுதிப்படுத்தினர்.

ஆப்கானிஸ்தானை 2021ஆம் ஆண்டு தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து இவ்வாண்டு அக்டோபரில் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோசமான எல்லைப் பூசலில் இருதரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பதற்றம் தொடர்கிறது.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. தன் நாட்டில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது. பல தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படுவதாக பாகிஸ்தான் குறை கூறுகிறது.

அதனை ஆப்கானிஸ்தான் மறுத்து வருகிறது. பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை என்று அவற்றை ஆப்கானிஸ்தான் வகைப்படுத்துகிறது. திங்கட்கிழமைக்கும் செவ்வாய்க்கிழமைக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. துருக்கி, சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளின் தலைமையில் அண்மையில் நடந்த மூன்று அமைதிப் பேச்சுவார்த்தைகளும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்தவில்லை.

குறிப்புச் சொற்கள்