வாஷிங்டன்: உலகத்தின் பெருங்கடல்களிலும் நீர் நிலைகளிலும் 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 600 மில்லியன் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கோக்க கோலா நிறுவனத்தின் உற்பத்தியால் ஏற்படும் என்று ஓஷியானா என்ற லாப நோக்கமற்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அது 18 மில்லியன் திமிங்கிலங்களின் வயிற்றை நிரப்புவதற்குச் சமமான கழிவு.
உலகில் குளிர்பானங்களை ஆகப் பெரிய அளவில் உற்பத்தி செய்து விற்கும் நிறுவனங்களில் கோக்க கோலா முதலிடம் வகிக்கிறது என்று ஓஷியான இயக்கத்தை முன்னெடுக்கும் திரு மேட் லிட்டில்ஜான் கூறினார்.
உலக அளவில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பட்டியலிலும் கோக்க கோலா முன்னிருப்பதாக சைன்ஸ் அட்வான்சஸ் அமைப்பு சென்ற ஆண்டு வெளியிட்ட ஆய்வு குறிப்பிட்டது.
கோக்க கோலா உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 4 மில்லியன் கிலோகிராமைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கோக்க கோலா நிறுவனமும் 2022ஆம் ஆண்டு மறுபடியும் பயன்படுத்தக்கூடிய பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் கழிவுகளைக் கணிசமாகக் குறைக்க முற்படுவதாகச் சொன்னது.