மெல்பர்னில் பயங்கரவாத சதித்திட்டம் முறியடிப்பு

மெல்பர்னில் பயங்கரவாத சதித்திட்டம் முறியடிப்பு

1 mins read
3d9b29c7-7c13-4074-bcf3-eb02d1455545
-

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பயங்கரவாதி களின் சதித்திட்டத்தை முறியடித் திருப்பதாக ஆஸ்திரேலியப் போலிசார் கூறினர். அந்நகரில் பல இடங்களில் போலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனையின்போது பலர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதாக விக்டோரியா மாநில போலிஸ் உயர் அதிகாரி கிரஹெம் ஆஸ்டன் கூறினார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று மெல்பர்ன் நகரில் உள்ள செயின்ட் பால் தேவாலயம், பிலின்டர்ஸ் ஸ்திரீட் ரயில் நிலையம், ஃபெடரேசன் சதுக்கம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த தாகவும் அவர் சொன்னார். வெடிபொருட்கள், கத்திகள், துப்பாக்கிகள் இவற்றைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக திரு ஆஸ்டன் கூறினார். நேற்று கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஐந்து பேர் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மற்றொரு ஆடவரும் ஒரு பெண்ணும் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு வீட்டை போலிசார் சோதனை செய்தபோது ஒரு சிறுமியுடன் ஒருவர் அந்த வழியாக நடந்து செல்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்