பிலிப்பீன்ஸில் சூறாவளி: மக்கள் வெளியேற்றம்

பிலிப்பீன்ஸில் சூறாவளி: மக்கள் வெளியேற்றம்

1 mins read

மணிலா: பிலிப்பீன்சின் கிழக்கு கடலோரப் பகுதி களை சக்திவாய்ந்த புயல் இன்று தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக நேற்றிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 250,000 பேர் வசிக்கும் புறநகர் பகுதி தீவில் புயல் காற்று மணிக்கு 222 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. மணிலா மற்றும் லுசோன் தீவையும் புயல் காற்று நாளை தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.