தோக்கியோ: ஜப்பானில் பரவும் பறவைக் காய்ச்சலைக் கட்டுப் படுத்த அங்கு 90,000 கோழிகளும் வாத்துகளும் அழிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். ஜப்பானில் கோழி மற்றும் வாத்துப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கிருமி கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிருமி தொற்றிய பறவைகள் அழிக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஜப்பானில் முதன் முதலாக நவம்பர் மாதம் வாத்துகளுக்கு இக்கிருமி தொற்றியிருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் 18,000 வாத்துகள் அப்போது அழிக்கப்பட்டன.
ஜப்பானில் பறவைக் காய்ச்சல்: 90,000 கோழிகளும் வாத்துகளும் அழிக்கப்படும்
1 mins read

