புத்தாண்டு வாணவேடிக்கையின்போது வெடிவிபத்தில் 10 பேர் காயம்

புத்தாண்டு வாணவேடிக்கையின்போது வெடிவிபத்தில் 10 பேர் காயம்

1 mins read
972ad1c0-adff-4222-b781-282a13f0e0b7
-

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் கிள்ளான் துறைமுகத்தில் உள்ள பண்டமாரான் விளையாட்டு வளாகத்தில் நிகழ்ந்த புத்தாண்டு வாணவேடிக்கையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் காயமடைந்துள்ளனர். புத்தாண்டு பிறந்து சில நிமிடங்களுக்குள் இந்த விபத்து நிகழ்ந்தது. புத்தாண்டு கொண் டாட்டங்களுக்காக ஏற்பாடு செய் யப்பட்டிருந்த வாணவேடிக்கையின் போது வெடிகளில் பல நிலத் திலிருந்து மேலெழும்பி வெடிப் பதற்குப் பதிலாக நிலத்திலேயே வெடித்தன. அப்போது சுற்றியிருந்த பார்வையாளர்கள் மீது வெடிச் சிதறல்கள் விழுந்ததால் பலர் காயமுற்றனர். வெடிச் சிதறல்களில் இருந்து தப்புவதற்காக பாது காப்பான இடங்களை நோக்கி பார்வையாளர்கள் ஓட வேண்டிய தாயிற்று. கால்களில் ஏற்பட்ட சிறிய காயங்களுக்காக ஏழு பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

வாணவேடிக்கையின்போது வெடிச் சிதறல்களிலிருந்து தப்ப பாதுகாப்பான இடங்களுக்கு பார்வையாளர்கள் ஓடிச் சென்றனர். அந்த விபத்தைக் கண்டு சிறுவர் பலர் அச்சத்தில் கூக்குரலிட்டனர். படம்: கா கா எனும் ஃபேஸ்புக் கணக்கு