டிரம்ப்: வடகொரியாவின் எந்த ஏவுகணையும் அமெரிக்காவை நெருங்காது

டிரம்ப்: வடகொரியாவின் எந்த ஏவுகணையும் அமெரிக்காவை நெருங்காது

1 mins read
0830535f-0a50-40c5-995c-6ac23a1ac2e9
-

வா‌ஷிங்டன்: வடகொரியாவின் எந்த ஏவுகணையும் அமெரிக்காவை நெருங்காது என்று அந் நாட்டு அதிபராகத் தேர்வு செய்யப் பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளளார். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தமது நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை யைத் தயாரிக்கும் பணியின் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட தாக கூறும் நிலையில், திரு டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். "வடகொரியா இப்பொழுது தான் அமெரிக்காவின் சில பகுதிகளை எட்டும் சக்திகொண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள தாக கூறியுள்ளது. அது நடக் காது," என்று அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

வடகொரியா அணுவாயுத வல்லரசாக உருவாவதை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா அடிக்கடி கூறி வந்தபோதிலும், திரு டிரம்ப் அந்த நாட்டுக்கு எதிரான தமது கொள் கையை இதுநாள் வரை தெளி வாகக் கூறியதில்லை என்பது கவனிக்கத்தக்கது. அத்துடன், முக்கிய கொள்கைகள் தொடர் பான கருத்துகளை அவர் அடிக் கடி டுவிட்டரில் பதிவு செய்வது வழக்கமாகி வருகிறது.