இஸ்தான்புல்: இஸ்தான்புல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலரைக் கொன்ற துப்பாக்கிக்காரனைத் துருக்கிய அதிகாரிகள் அடையாளம் கண் டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். அந்த துப்பாக்கிக்காரனைத் தீவிரமாகத் தேடி வரும் போலிசார், போராளிகள் மறைந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படும் இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தாண்டு தினத்தன்று இஸ்தான்புல் நகர இரவு கேளிக்கை விடுதியில் கூடியிருந்த மக்கள் மீது ஒரு துப்பாக்கிக்காரன் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 39 பேர் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் துப்பாக்கிக்காரனை போலிசார் தீவிரமாகத் தேடி வரும் வேளையில் அந்த சந்தேக நபரைப் பற்றிய அடையாளம் தெரிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

