ஒபாமாவின் பிரியாவிடை உரை; அலைமோதும் மக்கள் கூட்டம்

ஒபாமாவின் பிரியாவிடை உரை; அலைமோதும் மக்கள் கூட்டம்

1 mins read
074d9de9-0692-4934-96bc-5df07c313b45
-

அமெரிக்க மக்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்து மக்கள் விரும்பும் அதிபராக இருந்த திரு ஒபாமா இன்று சிகாகோவில் பிரியாவிடை உரை நிகழ்த்தவுள்ளார். அவரது உரையைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முன்னதாக இலவச டிக்கெட் வாங்குவதற்காக பலர் கடும் குளிரையும் பொருட்படுத்தாது இரண்டு மணி நேரம் காத்திருந்தனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற திரு ஒபாமா தாம் ஆற்றிய பணிகள் மற்றும் சாதனைகளைப் பற்றி தமது உரையில் எடுத்துரைப்பார் என்று தெரிகிறது. அவர் இம்மாதம் 20ஆம் தேதி பதவி விலகவுள்ளார். படம்: ஏஎஃப்பி