தைவான் நீரிணையில் நுழைந்த சீனாவின் விமானந்தாங்கிக் கப்பல்

தைவான் நீரிணையில் நுழைந்த சீனாவின் விமானந்தாங்கிக் கப்பல்

1 mins read
5cb18ae6-90c5-46c9-8033-a0b512ee5b5f
-

தைப்பே: தைவான் நீரிணைப் பகுதியில் சீனாவின் விமானந்தாங்கிக் கப்பல் நுழைந்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்கு தைவான் அதன் கடற்படைக் கப்பல்களை அனுப்பியது. அத்துடன் அந்த நீரிணைப்பகுதிக்கு உயரே பறந்த தைவானிய விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக தைவானியத் தகவல்கள் கூறின. இந்த விவகாரம் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இதற்கிடையே தைவானிய கடல் பகுதியில் சீனக் கப்பல் அத்துமீறி நுழையவில்லை என்று சீனா அறிவித்துள்ளது.

தென் சீனக் கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சீனாவின் விமானந்தாங்கிக் கப்பல் பயிற்சியை முடித்துக்கொண்டு திருப்பியதாக சீன தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. ஆனால் அக்கப்பலைக் கண்காணிக்க தைவானிய கப்பல்கள் பின்தொடர்ந்து வந்ததாக அமைச்சு குறிப்பிட்டது. தென் சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதன் கோரிக்கையை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் அதன் ராணுவ நடவடிக்கைகளையும் சீனா அதிகரித்து வருகிறது. சீனாவின் இத்தகைய செயலுக்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தென்சீனக் கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சீனாவின் விமானந்தாங்கிக் கப்பல். படம்: ராய்ட்டர்ஸ்