ஆஸ்திரேலியாவில் 'ரோலர்கோஸ்டரில்' சிக்கிக்கொண்டவர்கள்

ஆஸ்திரேலியாவில் 'ரோலர்கோஸ்டரில்' சிக்கிக்கொண்டவர்கள்

1 mins read
b0bb616f-d1f9-46ac-b9d0-0e8f5cf22aa2
-

ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்டில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில் 'ரோலர்கோஸ்டரில்' சென்றுகொண்டிருந்த 20 பேர் அது திடீரென்று நின்றதும் அதில் சிக்கிக்கொண்டனர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டதாக தகவல்கள் கூறின. பெரும்பாலானோர் எளிதாக மீட்கப்பட்டதாகவும் ஆனால் நான்கு பேரை மீட்புக் குழுவினர் ஏணியைப் பயன்படுத்தி மீட்டதாகவும் கூறப்பட்டது. அந்த ரோலர்கோஸ்டர் திடீரென்று நின்றதற்கு என்ன காரணம் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய கேளிக்கை பூங்காவில் நிகழ்ந்த விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். படம்: ராய்ட்டர்ஸ்