குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்ட சிறுமி 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு

குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்ட சிறுமி 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு

2 mins read
d403a7a8-b800-4bcf-ad3f-811fef232d2b
-

வா‌ஷிங்டன்: ஃபுளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனை யிலிருந்து கடத்தப்பட்ட ஒரு பச்சிளம் குழந்தை உயிருடன் இருப்பது 18 ஆண்டுகளுக்குப் பிறகு தெரியவந்துள்ளது. அந்தப் பெண் குழந்தை தற்போது 18 வயதுப் பெண்ணாக வளர்ந்துள்ளார். கமியா மோப்லி என்ற பெயருடைய அப்பெண் தெற்கு கரோலினாவில் கண்டுபிடிக்கப் பட்டதாக அமெரிக்கப் போலிசார் கூறினர். 1998ஆம் ஆண்டு கடத்தப் பட்ட மோப்லியை போலிசார் சில நாட்களுக்கு முன்பு காப்பாற்றினர். தங்களுக்கு முன்கூட்டியே கிடைத்த தகவலைத் தொடர்ந்து மோப்லியை மீட்க முடிந்தது என்று போலிசார் கூறினர். பச்சிளக் குழந்தையை கடத்திச் சென்றதாக 51 வயது குளோரியா வில்லியம்ஸ் என்ற மாது மீது தெற்கு கரோலினா அதிகாரிகள் குற்றம் சாட்டி யுள்ளனர்.

பிறந்து எட்டு மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை (மோப்லி) ஒரு மாது கடத்திச் சென்றார். அந்த மாது, மருத்துவமனையின் ஊழியர் போல் நடித்து குழந்தையைக் கடத்திச் சென்றதாகக் கூறப் பட்டது. குழந்தைக்கு காய்ச்சல் இருப்பதாகவும் அதனால் அக்குழந்தையை மருத்துவரிடம் காண்பிப்பதற்காக குழந்தையை அங்கிருந்து எடுத்துச் செல்வதாக வும் அக்குழந்தையின் தாயிடம் அந்த மாது கூறியிருக்கிறார். அவ்வாறு குழந்தையை கடத்திச் சென்றவர் மாயமாய் மறைந்து விட்டார். இந்த விவகாரம் ஊடகங் களில் தலைப்புச் செய்தாக வெளிவந்தது. குழந்தையைக் கண்டுபிடிக்க போலிசார் தீவிர மாகத் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் 18 ஆண்டு களுக்குப் பிறகு மோப்லியை போலிசார் கண்டுபிடித்துள்ளனர். மரபணு சோதனை மூலம் காணாமல்போன குழந்தைதான் மோப்லி என்பது உறுதியாகத் தெரியவந்துள்ளது.