பெய்ஜிங்: சீனா, அமெரிக்கா இடையேயான உறவு, முக்கிய விஷயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் இடை யூற்றைத் தவிர்க்க 'ஒரே சீனா' கொள்கையின்படி தைவானின் நிலையை அமெரிக்கா அங்கீ கரித்து தைவான் தொடர்பான பிரச்சினைகளில் கவனமாக அணுகுமாறு சீனா கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், "சீனா-அமெரிக்கா இடையேயான உறவுகளுக்கு அரசியல் ரீதியான அடித்தளமாக விளங்கும் 'ஒரே சீனா' கொள்கை உறுதியானது; பேரத்துக்குட்பட்ட தல்ல," என சீனாவின் வெளி யுறவுப் பேச்சாளார் லு காங் இணையச் செய்தி ஒன்றில் குறிப் பிட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதத்துக்குள்ளாக சீனா-அமெரிக்கா உறவு குறித்து அமெரிக்க அதிபர் பதவிக்குத் தேர்தெடுக்கப்பட்டிருக்கும் டோனல்ட் டிரம்ப் இரு முறை கருத்துத் தெரிவித்ததை அடுத்து சீனா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சீனா அதன் நாணயக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, அதன் சந்தையை உலக நாடு களுக்குத் திறந்துவிடுவது ஆகிய வற்றின் மூலம் அமெரிக்க நிறு வனங்கள் போட்டியிடுவதற்கு அனுமதிப்பதில் முன்னேற்றம் ஏற்படுவதைப் பொறுத்தே,
தைவானும் சீனாவும் சீனாவின் அங்கங்கள் என்று குறிப்பிடும் 'ஒரே சீனா' கொள்கையை ஏற்றுக்கொள்வது குறித்து முடிவெடுக்குமென திரு டிரம்ப் குறிப்பிட்டதாக வால் ஸ்திரீட் ஜர்னல் பத்திரிகை சென்ற வெள்ளிக்கிழமை தெரிவித் திருந்தது. இதற்கிடையே, மத்திய அமெ ரிக்காவுக்குப் பயணம் மேற் கொண்டிருந்த தைவானிய அதிபர் சாய் இங் வென் நேற்று முன்தினம் சான்பிரான்சிஸ்கோவுக்குச் சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

