டாக்கா: பங்ளாதேஷின் துராக் நதிக் கரையில் உள்ள டோங்கி நகரில் ஆண்டுதோறும் முஸ்லிம் கள் கூடி நடத்தும் தொழுகை யான பிஷ்வா இஜ்டெமா மூன்று நாட்களுக்கு நடைபெறும். அமைதியான முறையில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதுடன் சமயத் தலைவர்களின் உரைகளையும் கேட்கும் வாய்ப்புப் பெறுவர். நேற்றுடன் நிறைவு பெற்ற இவ்வாண்டுக்கான பிஷ்வா இஜ்டெமாவில் லட்சக் கணக் கானோர் கலந்து கொண்டனர். இறுதி நிகழ்ச்சியான அகேரி முனாஜட்டில் கலந்து கொள்வதற்காக விரைந்து சென்ற ஒருவர் ரயிலின் மேல் தளத்திலிருந்து மற்றொரு ரயிலுக்கு தாவிச் செல்வதை பயணிகள் ஆச்சரியந்துடன் பார்த்தனர். படம்: ராய்ட்டர்ஸ்
தொழுகைக்காகச் சென்ற பயணி ரயில்களுக்கிடையே தாவிச் சாகசம்
1 mins read
-

