தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெக்டோனல்ட்ஸ் பர்கருடன் தொடர்புடைய கிருமித்தொற்றால் 75 பேர் பாதிப்பு

1 mins read
5a244e37-879f-418a-943f-ed3735f2c4b4
மெக்டோனல்ட்சின் குவாட்டர் பவுண்டர் பர்கர்கள் எவ்வாறு மாசடைந்தன என்பது குறித்து கண்டறிய விசராணை நடைபெறுகிறது. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்காவில் விற்கப்பட்ட குவாட்டர் பவுண்டர் பர்கருடன் தொடர்புடைய இ. கோலை கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மோசமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அக்டோபர் 25ஆம் தேதியன்று தெரிவித்தனர்.

75 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் அமெரிக்காவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் கூறினர்.

இ. கோலை கிருமித்தொற்று காரணமாக 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொலராடோ மாநிலத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இத்தகவலை அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாக அமைப்பும் நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு மையமும் வெளியிட்டன.

இ. கோலை கிருமித்தொற்று காரணமாக சிறுவர் ஒருவருக்கும் பெரியவர் ஒருவருக்கும் சிறுநீரகத்தில் ரத்த நாளங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பர்கர்கள் எவ்வாறு மாசடைந்தன என்பது குறித்து கண்டறிய விசராணை நடைபெறுகிறது.

பாதிக்கப்பட்ட 13 மாநிலங்களில் உள்ள மெக்டோனல்ட்ஸ் உணவகங்களில், குவாட்டர் பவுண்டர் பர்கர் விற்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஉணவுகிருமித்தொற்று