75 வயதில் தெறிக்கவிட்ட மூதாட்டி!

75 வயதில் தெறிக்கவிட்ட மூதாட்டி!

07 Mar 2023 - 6:29 pm

1 mins read

யாழ்ப்பாணம்: முன்னாள் மாணவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வேகமாக ஓடி, முதல் பரிசைத் தட்டிச் சென்று, வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி.

யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன.

அதில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்குகொண்டார் திருவாட்டி புனிதவதி. அப்போட்டியில் 45 வயதிற்குக் குறைவான அறுவரும் 55 வயதிற்குக் குறைவான நால்வரும் கலந்துகொண்டு ஓடினர்.

இறுதியில், அவர்களில் ஆக வயதானவரான திருவாட்டி புனிதவதியே மகுடம் சூடினார். இந்த ஓட்டப் பந்தயம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை மெய்ப்பித்துக் காட்டிய திருவாட்டி புனிதவதிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.