ஐவரை விடுவிக்கக் கோரி ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்

ஐவரை விடுவிக்கக் கோரி ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்

1 mins read
1090e270-9395-4aee-9818-ad8ecd7ddfd6
-

ஹாங்காங்: சீன அரசாங்கத்தை விமர்சித்து புத்தகங்களை வெளியிட்ட ஒரு பதிப்பகத்தின் ஐந்து பேர் காணாமல் போனதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டம் நடைபெறுகிறது. நேற்று நடந்த ஆர்ப்பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஹாங்காங்கில் உள்ள சீன அரசாங்கப் பிரதிநிதியின் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

காணாமல்போன அந்த ஐந்து பேரும் சீனாவில் சீன அதிகாரிகளால் கைது செய்யப் பட்டிருக்கலாம் என்று ஜனநாயக ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர். அந்த ஐந்து பேரையும் விடுவிக்கக் கோரி அவர்கள் நேற்று மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஐந்து பேரும் காணாமல்போனதையடுத்து பேச்சு சுதந்திரத்தை முடக்கவும் சீன அரசாங்கம் முயற்சி எடுக்கும் என்ற அச்சம் ஜனநாயக ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

அந்த ஐவர் காணாமல்போன விவகாரம் குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.

சீன அரசாங்கத்தை விமர்சித்து புத்தகங்களை வெளியிட்ட ஒரு பதிப்பகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காணாமல் போனதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டம் நடந்தது. அந்த ஐவரையும் விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ்