பிரேசிலியா: பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜயேர் பொல்சொனாரோவுக்கு ஆதரவாக மக்கள் கூடிய இடத்தில் மின்னல் தாக்கியதை அடுத்து, 89 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) நிகழ்ந்தது.
இந்தத் தகவலைப் பிரேசிலியத் தீயணைப்புப் படை வெளியிட்டது.
தேர்தலில் நூலிழையில் தோல்வி அடைந்த பிறகு, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குத் தலைமை தாங்கியதற்காகத் திரு பொல்சொனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு ஆதரவாகப் பேரணி நடத்தப்பட்டது.
இதில் மழையையும் பொருட்படுத்தாமல் பிரேசிலியத் தலைநகர் பிரேசிலியாவில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.
வண்ணமயமான குடைகள், மழையங்கிகள் ஆகியவற்றுடன் திரு பொல்சொனாரோவின் ஆதரவாளர்கள் திரண்ட இடத்தில் திடீரென்று மின்னல் தாக்கியது.
காயம் அடைந்த 89 பேரில் 47 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
11 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

