237 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட அரிய நகல் வட கேரொலைனாவில் அக்டோபர் 17ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை நடந்த ஏலத்தில் $9 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
1787ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பு மாநாட்டிற்குப் பிறகு அச்சிடப்பட்ட அரசியலமைப்புச் சட்ட நகலை ஏலத்தில் எடுத்தவரின் பெயர் உடனடியாக வெளியிடப்படவில்லை.
‘பிரங்க் ஆக்ஷன்ஸ்’ என்னும் தனியார் ஏல நிறுவனம் இந்த ஆவணத்தை விற்றது.
$1.1 மில்லியன் அமெரிக்க டாலருக்குத் தொடங்கிய இந்த நகலின் ஏலத்தொகை வெறும் ஏழு நிமிடங்களில் 49 மில்லியன் அமெரிக்க வெள்ளி வரை அதிகரித்தது என அந்நிறுவனத்தின் வெளியுறவுப் பிரிவின் இயக்குநர் கூறினார்.
“மிகச் சிறந்த விலை. முக்கியமான பொருள்களுக்கு அதிக விலை கிடைப்பது மிகவும் முக்கியம்,” என அக்டோபர் 18ஆம் தேதி நடந்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.

