சிங்கப்பூரில் புதிதாக 9 பேருக்கு கிருமித்தொற்று

சிங்கப்பூரில் புதிதாக 9 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
48f64f9c-6a10-4286-8aa2-eb3059c83727
ஆள் நடமாட்டம் இல்லாத சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் நிலையம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சமூக அளவில் மூவர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஜூன் 11 ஆம் தேதி) புதிதாக 9 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தில் தொற்று உறுதியான மூவருக்கும் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்பு இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் எவருக்கும் கிருமி தொற்று பதிவாகவில்லை.

இதற்கிடையே, வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஆறு பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவர்களில் ஐவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.

சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 62,245 ஆக உள்ளது.

வியாழக்கிழமை இரவு நிலவரப்படி, 150 கொவிட்-19 கிருமித்தொற்று நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

287 பேர் சமூக தனிமைப்படுத்தும் வளாகங்களில் பராமரிக்கப்படுகின்றனர்.

கூடுதல் தகவல்கள் இன்றிரவு வெளியிடப்படும்.