ஜெர்மனியின் சுங்கவரித்துறை அதிகாரிகள் பெண் பயணி ஒருவரிடம் இருந்து 90 கிலோ துபாய் ‘ஆடம்பர’ சாக்லெட்களை விமான நிலையத்தில் பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவம் ஹேம்பர்க் விமான நிலையத்தில் கடந்த மாதம் நடந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை (ஜனவரி 8) தெரிவித்தனர்.
பயணி நூற்றுக்கணக்கான டாலர் இறக்குமதி வரியாகச் செலுத்தாமல் ஆடம்பர சாக்லெட்களை நாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
ஜெர்மனியில் அந்த ஆடம்பர சாக்லெட்டின் ஒரு துண்டு 35 வெள்ளிக்கு விற்கப்படுகிறது.
அண்மையில் கடை ஒன்று வெளியே ஆடம்பர சாக்லெட்டை வாங்கப் பலர் வரிசை பிடித்துக் காத்திருப்பது டிக்டாக் தளத்தில் பதிவு செய்யப்பட்டது.
அந்தக் காணொளி மூலம் அந்த ஆடம்பர சாக்லெட் மேலும் பிரபலமாகியுள்ளது.
தடுத்துவைக்கப்பட்ட பெண்ணுக்கு 33 வயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
அவர் 200 கிராம் எடைகொண்ட 460 சாக்லெட் துண்டுகளை மூன்று பயணப்பெட்டிகளில் கொண்டு சென்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு சாக்லெட் துண்டிற்கும் அப்பெண் 6.50 வெள்ளி இறக்குமதி வரியாகச் செலுத்தியதாகக் கூறியுள்ளார்.
பெண்ணிடம் பறிமுதல் செய்யப்பட்ட சாக்லெட்டுகள் மீண்டும் துபாய்க்கு அனுப்பப்படும் அல்லது அழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பெண் கொண்டு சென்ற சாக்லெட்டின் பெயர் வெளியிடப்படவில்லை.