95 வயது மூதாட்டியை சுட்ட காவல்துறை

95 வயது மூதாட்டியை சுட்ட காவல்துறை

1 mins read
19f3f3cb-5630-420e-b95b-86ad5b667c26
படம்: பெக்சல்ஸ் -

ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகள் 95 வயது மூதாட்டியை டேசர் எனும் மின்சாரத்தைப் பாய்ச்சும் துப்பாகியால் சுட்டனர்..

மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

சிட்னியின் தென்மேற்கு வட்டாரத்தில் உள்ள கூமா என்னும் பகுதியில் புதன்கிழமை (மே 17) அந்த சம்பவம் நடந்தது.

மூதாட்டி பராமரிப்பு இல்லத்தில் இருந்ததார், அவர் ஓர் அறைக்கு வெளியே கத்தியை ஏந்தியபடி நின்றுகொண்டிருந்தார் அதனால் அங்கிருந்த ஊழியர்கள் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

அதிகாரிகள் சில நிமிடங்கள் மூதாட்டியிடம் பேசினர் ஆனால் அவர் கத்தியை கீழே வைக்காமல் அதிகாரிகள் நோக்கி நகர்ந்தார். அதன் பின்னர் அவர் டேசரால்சுடப்பட்டார்.

மூதாட்டி மெதுவாக அதிகாரிகளை நோக்கி நடந்தார் என்றும் அவர் நடக்க சிரமப்படுபவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. மூதாட்டி மறதி நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.

சமையல் அறையில் அவர் கத்தியை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பெரிய அளவில் கண்டனங்களும் எழுந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணையும் நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்