பினாங்கு விமான நிலையக் கழிவறையில் கைவிடப்பட்ட குழந்தை

பினாங்கு விமான நிலையக் கழிவறையில் கைவிடப்பட்ட குழந்தை

1 mins read
பிறந்த குழந்தை குப்பைத்தொட்டியில் கண்டெடுப்பு
d45ed9c9-8ce9-4f23-a8bc-a2040f5197db
இச்சம்பவத்துடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரையும் பெண் ஒருவரையும் காவல்துறை தடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: பினாங்கு அனைத்துலக விமான நிலையம்/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு அனைத்துலக விமான நிலையக் கழிவறையில், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1), பிறந்த குழந்தை ஒன்று குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது.

குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே அங்குக் கைவிடப்பட்டதாக நம்பப்படுகிறது. தொப்புள் கொடியும் நஞ்சுக்கொடியும் அகற்றப்படாத நிலையில் அக்குழந்தை காணப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பான மூன்று காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவரையும் மாது ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபினாங்குவிமான நிலையம்குழந்தைகழிவறைகாவல்துறைகைது

தொடர்புடைய செய்திகள்