லிமா: பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள அலெஜாண்ட்ரோ வில்லானுவேவா விளையாட்டரங்கில் நடைபெற்ற கொடி அசைவு நிகழ்வின்போது நடந்த அசம்பாவிதத்தில் ஒருவர் மாண்டதுடன் பலர் காயமடைந்தனர்.
யுனிவர்சிடாரியோ அணிக்கு எதிரான காற்பந்து ஆட்டத்துக்கு ஒரு நாள் முன்னதாக, வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 3) இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
உயிரிழந்தவர், காயமடைந்தோர் ஆகியோருக்கு அலாயன்ஸ் லிமா காற்பந்துக் குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டது. ஏறத்தாழ 60 பேர் காயமடைந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
“தொடர்புடைய அதிகாரிகளுடன் நாங்கள் முழுமையாகவும் வெளிப்படையாகவும் ஒத்துழைக்கிறோம்,” என்று அலாயன்ஸ் லிமா குழு தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.
அசம்பாவிதத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்தப்படும் என்று அது உறுதி அளித்தது.
விளையாட்டரங்கின் கட்டமைப்புகளில் எவ்விதக் கோளாறும் இல்லை என்று தீயணைப்புத் துறை தெரிவித்தது.


