விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பலி

1 mins read
c7ed5b6c-40db-48db-b273-663d026afdfd
உயிரிழந்த மாது ஒன்பது மாத கர்ப்பமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: பிக்சாபே

மலாக்கா: வயிற்றில் குழந்தையுடன் மோட்டார்சைக்கிளில் பயணியாகச் சென்ற 27 வயது நிறைமாத கர்ப்பிணி, விபத்தில் சிக்கி மாண்டார்.

ஜாலான் தமிங் சாரியில் நேர்ந்த இந்த விபத்தில் மாண்ட அந்த மாது நூர் இமான் ஹமிடுன் என்று அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து ஜூன் 1ஆம் தேதி இரவு 10.05 மணிக்கு நடந்ததாகவும் மாது அவரின் 28 வயது கணவருடன் பயணம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

அப்போது 41 வயது இல்லத்தரசி ஒருவர் ஓட்டி வந்த காருடன் அவர்கள் இருந்த மோட்டார்சைக்கிள் மோதியது.

கர்ப்பிணிக்கு விபத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதை அடுத்து மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரும் அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாவலராகப் பணிபுரியும் கர்ப்பிணியின் கணவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் கார் ஓட்டுநர் காயங்களின்றித் தப்பித்ததாகவும் அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்