தோக்கியோ: கிழக்கு ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) நிகழ்ந்த 12 கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
அவ்வழியாகச் சென்ற கனரக வாகனத்திலிருந்து தேயிலைகள் சாலையில் கொட்டியதால் பின்னால் வந்த வாகனங்கள் சறுக்கியதாகக் காவல்துறை தெரிவித்தது.
தோச்சிகி மாநிலம், சனோவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இரு தடங்களைக் கொண்ட சாலையில் 500 மீட்டர் தூரத்திற்கு தேயிலைகள் சிதறிக் கிடந்தன.
விபத்தில் காயமுற்ற நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டது உறுதிசெய்யப்பட்டது. எஞ்சிய மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை.
உயிரிழந்த அந்த 78 வயது ஆடவர், கனரக வாகனத்திலிருந்து இறங்கியபோது அவர்மீது வாகனம் மோதியதாகக் காவல்துறை தெரிவித்தது.
விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. சாலையில் கொட்டிக் கிடந்த தேயிலைகளை அப்புறப்படுத்த ஊழியர்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

