மலேசிய வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) 42 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
உதவிக்கான அழைப்பு அதிகாலை 5.24 மணிக்குக் கிடைத்ததாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு, மீட்புப் பிரிவினர் தெரிவித்ததாக மலேசிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
ராவாங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து சுங்கை புவாயாவுக்கு அருகே விபத்தில் சிக்கியதாக அவர் கூறினார்.
சம்பவ இடத்திற்கு எட்டு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். பேருந்துடன் லாரி ஒன்று மோதியதாகப் பின்னர் தெரியவந்தது.
நசுங்கிய வாகனத்துக்குள் ஐந்து பயணிகள் சிக்கிக்கொண்டதாக அவர் கூறினார்.
இரண்டு ஓட்டுநர்கள் உட்பட 42 பேர் பேருந்தில் இருந்தனர். 38 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மீட்புப் பணிகள் காலை ஏறத்தாழ 9 மணி வரை நடைபெற்றது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 26 பயணிகள் காயமின்றித் தப்பினர்.

