வாஷிங்டன்: கணக்கியல் நிறுவனமான பிடபிள்யுசி, அமெரிக்காவில் 1,500 பேரை ஆட்குறைப்பு செய்கிறது.
அந்நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கையில் இது ஏறக்குறைய 2 விழுக்காடு என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் பிடபிள்யுசி நிறுவனத்தில் 75,000க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
“இது கடினமான முடிவு. ஊழியர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு கவனத்துடன் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்,” என்று பிடபிள்யுசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சீனாவில் பிடபிள்யுசி அதன் நிதிச் சேவைத் தணிக்கை ஊழியர் எண்ணிக்கையில் பாதியளவு வரை குறைக்க அந்நிறுவனம் பரிசீலித்ததாக 2024ல் ராய்ட்டர்ஸ் தெரிவித்திருந்தது.