ஹாலிவுட் நடிகை எவா கிரீன் எடுக்காத திரைப்படம் ஒன்றுக்கு 1.3 மில்லியன் வெள்ளி சம்பளமாகப் பெற்றுள்ளார்.
பிரெஞ்சு நடிகையான எவா, ஜேம்ஸ் பாண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவர் 'எ பேட்ரியாட்' என்ற படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
படத்திற்கான பயிற்சியும் சில நாள்கள் வழக்கப்பட்டது.
ஆனால், அப்படத்தைத் தயாரிப்பு நிறுவனம் எடுக்கவில்லை.
அதைத்தொடர்ந்து, தமக்கு இழப்பீடு தர வேண்டும் என்று எவா லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எவா இழப்பீடு பெற தகுதியானவர் என்று தீர்ப்பளித்தார்.
எவா பல ஒப்பந்தங்களை மீறியதாகவும் தயாரிப்பாளரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் தயாரிப்புக் குழுவினர் வாதிட்டனர்.

